Saturday, June 29, 2019

திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளி திருப்புகழ்
திருப்புகழ் 266 கூந்தல் அவிழ்த்து  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தாந்தன தத்தன தத்தன தத்தன
     தாந்தன தத்தன தத்தன தத்தன
          தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள்
     பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
          கோம்பு படைத்த மொழிச்சொல்பரத்தையர் ...... புயமீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள்
     வாஞ்சையுறத் தழுவிச் சிலுகிட்டவர்
          கூன்பிறை யொத்த நகக்குறி வைப்பவர் ...... பலநாளும்

ஈந்த பொருட்பெற இச்சை உரைப்பவர்
      ஆந்துணையற்ற அழுகைக்குரல் இட்டவர்
           ஈங்கிசையுற்ற அலக்குண மட்டைகள் ...... பொருள்தீரில்
ஏங்கியிடக் கடையிற் த(ள்)ளி வைப்பவர்
     பாங்ககலக் கருணைக்கழல் பெற்றிட
          ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிடல் ...... அருள்வாயே

காந்தள் மலர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு
     வேந்து குரக்கு அரணத்தொடும் அட்டிடு
          காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் ...... மருகோனே
காங்கிசை மிக்க மறக்கொடி வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
          கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... யிளையோனே

தேந்தினை வித்தினர் உற்றிட வெற்றிலை
     வேங்கை மரத்தெழிலைக்கொடு நிற்பவ
          தேன்சொலியைப் புணரப் புனம் உற்றுறைகுவை ...... வானந்
தீண்டு கழைத்திரள் உற்றது துற்றிடு
     வேங்கை தனிற் குவளைச்சுனை சுற்றலர்
          சேர்ந்த திருத்தணிகைப் பதி வெற்புறை ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் ... கூந்தலை அவிழ்த்தும்
முடித்தும் மினுக்குபவர்கள்.

பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் ... பாய்கின்ற கண்களுக்கு
மை இட்டு மிரட்டுபவர்கள்.

கோம்பு படைத்த மொழிச் சொல் பரத்தையர் ... கோபக் குறிப்பான
மொழிகளைச் சொல்லும் விலைமாதர்கள்.

புயம் மீதே கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் ... தம்மிடம்
வந்தவர்களின் தோள்களின் மேல் கோங்கு மர முகையைப் போன்ற
மார்பகத்தால் அழுத்துபவர்கள்.

வாஞ்சை உறத் தழுவிச் சிலுகு இட்டவர் ... விருப்பத்துடன்
முன்னர் தழுவி பின்னர் துன்பம் ஊட்டும் சண்டை இடுபவர்கள்.

கூன் பிறை ஒத்த நகக் குறி வைப்பவர் பல நாளும் ஈந்த
பொருள் பெற இச்சை உரைப்பவர் ... வளைத்த பிறை போன்ற
நகக் குறியை வைப்பவர்கள். பல நாளும் கொடுத்து வந்த பொருளுக்கு
மேல் அதிகமாகப் பெற தங்கள் விருப்பத்தை எடுத்துச் சொல்பவர்கள்.

ஆம் துணை அற்ற அழுகைக் குரல் இட்டவர் ஈங்கிசை உற்ற
அவலக் குண மட்டைகள் ... தங்கள் விருப்பம் நிறைவேறும் வழி
அற்ற போது அழுகைக் குரலைக் காட்டுபவர்கள். தீங்கு செய்யும்
துன்பம் தரும் குணத்தைக் கொண்ட பயனற்றவர்கள்.

பொருள் தீரில் ஏங்கி இடக்கடையில் த(ள்)ளி வைப்பவர் ...
(கையில் தமக்குக் கொடுப்பதற்குப்) பொருள் இல்லாது போனால்
மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி
வைப்பவர்கள்.

பாங்கு அகலக் கருணைக் கழல் பெற்றிட ஈந்திலை எப்படி
நற் கதி புக்கிடல் அருள்வாயே ... ஆகிய பொது மகளிருடைய நட்பு
ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ
அருளவில்லையே. எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்
புரிவாயாக.

காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து
குரக்கு அரணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுதன் உத்தம
சற்குணன் மருகோனே ... (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை
அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற
அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக்
கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,
உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய)
மருகனே,

காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே ... (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்
வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர்
வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம்
போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான
விநாயகருக்குத் தம்பியே,

தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை
மரத்து எழிலைக் கொடு நிற்பவ தேன் சொ(ல்)லியைப்
புணரப் புனம் உற்று உறைகுவை ... இனிமையுள்ள தினையை
விதைத்த வேடர்கள் வருவதை அறிந்து தனி வேங்கை மரத்தின்
அழகு விளங்க நின்றவனே, தேன் போல இனிய சொற்களை
உடைய வள்ளியைச் சேர்வதற்கு (அவள் இருந்த) தினைப்
புனத்தைச் சேர்ந்து அங்கு இருந்தவனே,

வானம் தீண்டு கழைத் திரள் உற்றது துற்றிடு வேங்கை
தனில் குவளைச் சுனை சுற்று அலர் சேர்ந்த திருத்தணிகைப்
பதி வெற்பு உறை பெருமாளே. ... ஆகாயத்தைத் தொடும்படி
உயர்ந்த மூங்கிலின் கூட்டத்துக்கு அருகே நெருங்கி நிற்பனவும், பொன்
போல ஒளி வீசும் குவளை மலர்கள் சுனையில் சுற்றிலும் (எங்கும்)
பூத்திருப்பதுமான திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0266_u.html
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

Friday, June 28, 2019

திருப்புகழ் 264 குலைத்து மயிர் (திருத்தணிகை)


ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 264 குலைத்து மயிர்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனத்த தனத் தனத்த தனத்
     தனத்த தனத் தனத்த தனத்
          தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான

......... பாடல் .........

குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
     கழுத்து மணித் தனப்புரளக்
          குவித்த விழிக் கயற்சுழலப் ...... பிறைபோலக்
குனித்த நுதற் புரட்டி நகைத்
     துருக்கி மயற் கொளுத்தி யிணைக்
          குழைச்செவியிற் றழைப்ப பொறித் ...... தனபாரப்

பொலித்து மதத் தரித்த கரிக்
     குவட்டு முலைப் பளப்பளெனப்
          புனைத்த துகிற் பிடித்த இடைப் ...... பொதுமாதர்
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
     குலுக்கில் அறப் பசப்பி மயற்
          புகட்டி தவத்தழிப் பவருக்கு ...... உறவாமோ

தலத்த நுவைக் குனித்தொரு முப்
     புரத்தை விழக் கொளுத்தி மழுத்
          தரித்து புலிக்கரித் துகிலைப் ...... பரமாகத்
தரித்து தவச்சுரர்க்கண் முதற்
     பிழைக்க மிடற்று அடக்கு விடச்
          சடைக் கடவுள் சிறக்க பொருட் ...... பகர்வோனே

சிலுத்து அசுரர்க் கெலித்து மிகக்
     கொளுத்தி மறைத் துதிக்க அதிற்
          செழிக்க அருட் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா
தினைப்புனமிற் குறத்தி மகள்
     தனத்தின் மயற் குளித்து மகிழ்த்
          திருத்தணியிற் தரித்த புகழ்ப் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

குலைத்து மயிர்க் கலைத்து வளைக் கழுத்து மணித்
தனப்புரளக் குவித்த விழிக் கயற்சுழல ... மயிர் அவிழ்ந்து
கலைந்து போக, சங்கு போன்ற கழுத்தில் உள்ள மணிமாலை
மார்பகங்களின் மேல் புரள, குவிந்த கண்கள் கயல் மீனைப்
போல சுழல,

பிறைபோலக் குனித்த நுதற் புரட்டி நகைத்துருக்கி மயற்
கொளுத்தி இணைக் குழைச்செவியில் தழைப்ப ... பிறைச்
சந்திரனைப் போல வளைவுற்ற நெற்றியை நெறித்து, சிரித்து
மனதை உருகச் செய்து, காம ஆசையை உண்டு பண்ணி,
இணையான குண்டலங்கள் காதுகளில் விளங்க,

பொறித் தனபாரப் பொலித்து மதத் தரித்த கரிக் குவட்டு
முலைப் பளப்பளெனப் புனைத்த துகிற் பிடித்த இடைப்
பொதுமாதர் ... தேமல் கொண்ட தனப் பாரம், அழகு பெற்று மதம்
கொண்ட யானை போன்றும் மலை போன்றும் மார்பகங்கள் பளப்பள
என்று ஒளியிட, இறுக்க உடுத்த ஆடையைக் கொண்ட இடுப்பை
உடைய பொது மகளிர்

புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக் குலுக்கில் அறப்
பசப்பி மயற் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ ...
தோள்களினாலும், வளைப் பிலுக்காலும், நடைக் குலுக்காலும்
மிகவும் இன் முகம் காட்டி ஏய்த்து மோகத்தை ஊட்டி, தவத்தையும்
அழிக்கக் கூடிய பொது மகளிர்களின் சம்பந்தம் ஆகுமோ?

தலத்த நுவைக் குனித்தொரு முப்புரத்தை விழக்கொளுத்தி
மழுத்தரித்து புலிக் கரித்துகிலைப் பரமாகத் தரித்து ...
பூமியின் மத்தியில் விளங்கும் மேருவாகிய வில்லை வளைத்து,
ஒப்பற்ற முப்புரங்களை பொடிபடும்படி எரித்து, மழு ஆயுதத்தைக்
கையில் ஏந்தி, புலி, யானை இவைகளின் தோலை ஆடையாக அணிந்து,

தவச் சுரர்க்கண் முதற் பிழைக்க மிடற்றடக்கு விடச்
சடைக்கடவுட் சிறக்க பொருள் பகர்வோனே ... தவம் நிறைந்த
தேவர்கள் முதலானோர் பிழைக்கும் பொருட்டு கண்டத்தில்
அடக்கிய விஷத்தை உடைய சடைப் பெருமானாகிய சிவபெருமான்
மகிழ்ச்சி பெற பிரணவப் பொருளைக் கூறியவனே,

சிலுத்த சுரர்க் கெலித்து மிகக் கொளுத்தி மறைத் துதிக்க
அதிற் செழிக்க அருட் கொடுத்த மணிக் கதிர்வேலா ...
சண்டை இட்ட அசுரர்களை வென்று, அவர்களை நிரம்ப எரியிட்டு,
வேதம் துதி செய்ய அதனால் தேவர்கள் செழிப்புற அருள் புரிந்த
அழகிய சுடர் வேலனே,

தினைப்பு னமிற் குறத்தி மகள் தனத்தின் மயற் குளித்து
மகிழ்த் திருத்தணியில் தரித்த புகழ்ப் பெருமாளே. ... தினைப்
புனத்தில் குறப் பெண் வள்ளியின் மார்பகங்கள் மீதான மோகத்தில்
குளித்து மகிழும் பெருமாளே, திருத்தணிகை மலையில் நிலைத்து
வீற்றிருக்கும் புகழ் வாய்ந்த பெருமாளே.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0264_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம். 

Wednesday, June 26, 2019

திருப்புகழ் 260 கிரி உலாவிய (திருத்தணிகை)


ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா


ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 260 கிரி உலாவிய  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான


......... பாடல் .........

கிரியுலாவிய முலைமிசை துகிலிடு
     கபட நாடக விரகிகள் அசடிகள்
          கெடுவியாதிகள் அடைவுடை யுடலினர் ...... விரகாலே
க்ருபையினாரொடு மணமிசை நழுவிகள்
     முழுது நாறிகள் இதமொழி வசனிகள்
          கிடையின்மேல் மனமுருகிட தழுவிகள் ...... பொருளாலே

பரிவிலா மயல் கொடுசமர் புரிபவர்
     அதிக மாவொரு பொருள் தருபவரொடு
          பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே
பகழிபோல்விடு வினைகவர் திருடிகள்
     தமை எணாவகை யுறுகதி பெரும்வகை
          பகர மாமயில் மிசைவர நினைவதும்  ...... ஒருநாளே

அரியராதிபர் மலரயன் இமையவர்
     நிலைபெறாது இடர்பட உடன் முடுகியெ
          அசுரர் தூள்பட அயில்தொடும் அறுமுக ...... இளையோனே
அரிய கானகமுறை குறமகளிட
     கணவனாகிய அறிவுள விதரண
          அமரர் நாயக சரவணபவ திறல் ...... உடையோனே

தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
     சரிவுறா நிலைபெறு தவமுடையவர்
          தளர்விலா மனமுடையவர் அறிவினர் ...... பரராஜர்
சகல லோகமும் உடையவர் நினைபவர்
     பரவு தாமரை மலரடி யினிதுற
          தணிகை மாமலை மணிமுடி யழகியல் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள்
அசடிகள் ... மலை போன்ற மார்பின் மேல் ஆடையை அணிந்துள்ள

கபட நாடகம் ஆடும் தந்திரக்காரிகள், முட்டாள்கள்,

கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் ... கெட்ட
நோய்களை இடம் கொண்டுள்ள தேகத்தை உடையவர்கள்,

விரகாலே க்ருபையினார் ஒடு மணம் மிசை நழுவிகள் ...
வெகு சாமர்த்தியமாக, (தங்கள் மீது) அன்பு வைத்தவர்களோடு மணம்
செய்து கொள்வதாகக் கூறி பிறகு நழுவி விடுபவர்கள்,

முழுது நாறிகள் இத மொழி வசனிகள் ... முழுதும் துர் நாற்றம்
வீசுபவர்கள், இன்பம் உண்டாகும்படி பேசுபவர்கள்,

கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் ... படுக்கையின் மீது
ஆடவர் மனம் உருகும்படி தழுபவர்கள்,

பொருளாலே பரிவு இ(ல்)லா மயல் கொடு சமர் புரிபவர் ...
பொருள் காரணமாக அன்பு கலவாத ஆசையுடன் சண்டை செய்பவர்கள்,

அதிகமா(க) ஒரு பொருள் தருபவரொடு பழைய பேர் என
இதம் உற அணைபவர் ... அதிகமாக ஒரு பொருளைக்
கொடுப்பவர்களிடம் (அவர்களோடு) பழைய உறவினர் போல இன்பம்
பிறக்க அணைபவர்கள்,

விழியாலே பகழி போல் விடு வினை கவர் திருடிகள் ...
கண்களால் அம்பு செலுத்துவது போல காரியத்தை வெல்லும்
திருடிகள்,

தமை எ(ண்)ணா வகை அறு கதி பெறும் வகை ... (அத்தகைய)
விலைமாதர்களை நான் எண்ணாதபடிக்கு, அடைய வேண்டிய நற்
கதியைப் பெறும் வழியை,

பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே ... எனக்கு
நீ போதிக்க, சிறந்த மயில் மேல் வர நீ நினைக்கும்படியான ஒரு
நாள் உண்டாகுமோ?

அரி அர(ன்) அதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது
இடர் பட ... திருமால், ருத்திரன் என்னும் மேலோர், தாமரை மலரின்
மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் (தத்தம் தொழிலில்) நிலை பெற
ஒட்டாமல் துன்பப்பட,

உடன் முடுகியே அசுரர் தூள்பட அயில் தொடும் அறு முக
இளையோனே ... உடனே விரைந்து சென்று, அசுரர்கள் தூளாகுமாறு
வேலாயுதத்தைச் செலுத்திய ஆறு முக இளையோனே,

அரிய கானகம் உறை குற மகளிட கணவனாகிய அறிவு
உள விதரண ... அருமையான வள்ளி மலைக் காட்டில் உறைகின்ற
குறமகள் வள்ளி நாயகியின் கணவனாகிய, அறிவுள்ள தயாள குணம்
படைத்தவனே,

அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே ...
தேவர்களின் தலைவனே, சரவணபவனே, வெற்றியை உடையவனே,

தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை
பெறு தவம் உடையவர் ... தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம்
கற்றவர்களும், பொறுமை உடையவர்களும், தவறுதல் இல்லாத நிலைத்த
வகையில் தவம் புரிபவர்களும்,

தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர் ...
சோர்வு இல்லாத மனத்தை உடையவர்களும், அறிஞர்களும்,
மேலான அரசர்களும்,

சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர்
அடி இனிது உற ... எல்லா உலகங்களுக்கும் அதிபர்களும், உன்னை
நினைந்து போற்றுபவர்களும் தொழும் தாமரைமலர் போன்ற திருவடி
இனிது பொருந்த

தணிகை மாமலை மணிமுடி அழகியல் பெருமாளே. ...
திருத்தணி மாமலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும்
பெருமாளே.
நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0260_u.html
வெற்றிவேல் முருனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Wednesday, June 19, 2019

திருப்புகழ் 256 கலை மடவார்தம் (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
சிவகுருநாதா போற்றி. சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருத்தணிகைமலை முருகா போற்றி

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 256 கலை மடவார்தம்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்


தனதன தானம் தனதன தானம்
     தனதன தானம் ...... தனதான

......... பாடல் .........

கலை மடவார்தம் சிலை அதனாலுங்
     கனவளையாலுங் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
     கருது அலையாலும் ...... சிலையாலுங்

கொலைதரு காமன் பலகணை யாலுங்
     கொடியிடையாள் நின்று ...... அழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
     குளிர்தொடை நீதந்து ...... அருள்வாயே

சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
     திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவனமானும் கநவன மானும்
     செறிவுடன் மேவுந் ...... திருமார்பா

தலமகள் மீது எண் புலவர் உலாவுந்
     தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
     தனிமயிலேறும் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

கலைமடவார்தம் ... மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த
மாதர்களின்

சிலையதனாலும் ... வசைப்பேச்சின் ஒலியினாலும்,

கனவளையாலும் ... பெருத்த சங்கின் பேரொலியினாலும்,

கரைமேலே ... கரையின் மேல் இருந்து கூவுகின்ற

கருகிய காளம் ... மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின்
ஓசையாலும்,

பெருகிய தோயம் ... பரந்து விரிந்த கடலின் ஓசையாலும்,

கருது அலையாலும் ... சிந்தனை அலைகளாலும்,

சிலையாலுங் கொலைதரு காமன் ... கரும்பு வில்லால் கொலை
செய்யவல்ல மன்மதன்

பலகணையாலும் ... வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும்,

கொடியிடையாள் ... கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய
இத்தலைவி

நின்றழியாதே ... உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று
அழிவுறாமல்,

குரவணி நீடும் புயம் அணி ... குரா மலர்களைத் தரித்துள்ள
நீண்ட புயங்களில் அணிந்துள்ள

நீபங் குளிர்தொடை ... கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட
குளிர்ந்த மாலையை

நீதந்து அருள்வாயே ... நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக.

சிலைமகள் நாயன் ... மலையரசன் மகள் பார்வதி நாயகன்
சிவனும்,

கலைமகள் நாயன் ... கலைமகள் ரஸ்வதியின் நாயகன்
பிரம்மனும்,

திருமகள் நாயன் ... லக்ஷ்மியின் நாயகன் திருமாலும்

தொழும்வேலா ... வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே,

தினைவன மானும் ... தினைப் புனத்திலே காவல் காத்த மான்
போன்ற வள்ளியும்,

கநவன மானும் ... விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில்
வளர்ந்த மான் போன்ற தேவயானையும்

செறிவுடன் மேவும் திருமார்பா ... மனம் நிறைந்து அணைக்கும்
திருமார்பினனே,

தலமகள் மீது எண் புலவர் உலாவும் ... நிலமகளாகிய இவ்வுலகின்
மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும்

தணிகையில் வாழ்செங்கதிர்வேலா ... திருத்தணிகையில் வாழும்
ஒளி படைத்த வேலினை உடையவனே,

தனியவர் கூருந் தனிகெட ... உலக பாசத்தை நீக்கிய உன்
அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி,

நாளுந் தனிமயிலேறும் பெருமாளே. ... நாள்தோறும் ஒப்பற்ற
மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே.

* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு.
தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன.

*****
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை,சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின்
பிரிவுத்துயரைக் கூட்டுவன.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0256_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகன் துணை

Tuesday, June 18, 2019

திருப்புகழ் 253 கச்சணி இளமுலை (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை 
சிவகுருநாதா போற்றி
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகை மலை முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 253 கச்சணி இளமுலை  (திருத்தணிகை)

பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம்


தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான

......... பாடல் .........

கச்சணி யிளமுலை முத்தணி பலவகை
     கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக்
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
     கட்செவி நிகரல்குல் ...... மடமாதர்

இச்சையின் உருகிய கச்சையன் அறிவிலி
     யெச்சமில் ஒருபொருள் ......அறியேனுக்கு
இப்புவிமிசை கமழ் பொற்பத மலரிணை
     இப்பொழுது அணுக  ...... உன் அருள்தாராய்

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை
     நச்சியெ திருடிய ...... குறையால்வீழ்
குற்கிர வினியொடு நற்றிற வகையறி
     கொற்ற உவணமிசை ...... வருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
     அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே
அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
     அப்பனெ யழகிய ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கைச் சரி

சொலி வர மயல் கூறி ... கச்சு அணிந்த இளைய மார்பகங்கள் மீது
முத்தாலான ஆபரணங்கள் ஜொலிக்க, பல விதமான கை வளையல்கள்
பிரகாசிக்க, காம இச்சைகளை வெளியிட்டு,

கைப் பொருள் கவர் தரு மைப் பயில் விழியினர் கண் செவி
நிகர் அல்குல் மடமாதர் இச்சையில் உருகிய கச்சையன்
அறிவிலி ... (வந்த ஆடவர்களின்) கைப் பணத்தைத் திருடும் மை
தீட்டிய கண்களை உடையவர், பாம்பின் படத்தை ஒத்துள்ள
நிதம்பத்தை உடைய விலைமாதர்கள் மீது, ஆசையால் உள்ளமும்
உடலும் உருகிய தழும்பினன், அறிவில்லாதவன் நான்.

எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு இப்புவி மிசை கமழ்
பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்
தாராய் ... குறைவில்லாத ஒப்பற்ற பரம் பொருளை அறியாதவனான
எனக்கு, இந்த உலகில் மணமுள்ள அழகான மலர் போன்ற திருவடி
இணைகளை இப்போதே கிடைக்கும்படி உன் திருவருளைத்
தந்தருள்வாய்.

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர் தனை நச்சியெ
திருடிய குறையால் வீழ் குற்கிரவினி யொடு நல் திற வகை
அறி கொற்றவ உவண(ம்) மிசை வரு கேச(வ)ன் ... இடையர்
குலத்தைச் சேர்ந்தவர் வீட்டில் இடைச்சியர்கள் சேர்த்து வைத்திருந்த
தயிரை விரும்பி திருடிய குறைப்பாட்டினால் (கட்டப்பட்டுக்)
கிடந்திருந்த உரலோடு இழுத்துச் சென்று நல்ல ஒரு பாக்கியச்
செயலை* அறிந்து செய்த அரசன், கருட வாகனத்தில் வருகின்ற
திருமால்,

அச் சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன்
மகிழ் திரு மருகோனே ... அந்த அமுதம் நிறைந்த திருப்பாற்
கடலில் விஷம் மிகுந்த பாம்பாகிய ஆதிசேஷன் மீது உறங்கும் திருமால்
மகிழும் மருகனே,

அப்பு அணி சடை அரன் மெச்சிய தணி மலை அப்பனெ
அழகிய பெருமாளே. ... கங்கை நீரைத் தரித்த சடையை உடைய
சிவபெருமான் மெச்சிய திருத்தணிகை மலையில் இருக்கும் அப்பனே,
அழகிய பெருமாளே.


புராணவிளக்கம். 
நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேரனின் புத்திரர் இருவரும் மதுவருந்தி, ஆடையின்றி ஜலக்ரீடை செய்து, நாரதர் முன் தோன்றினர். நாரதர் சபிக்க அவர்கள் மருத மரமாயினர். கண்ணன் கட்டப்பட்ட உரல் அவர்கள் மீது விழுந்ததும் சாபம் தீர்ந்து மகிழ்ந்தனர்.

நன்றி-கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0251_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Monday, June 17, 2019

திருப்புகழ் 252 ஓலை இட்ட (திருத்தணிகை)




ஓம் முருகன் துணை 
சிவகுருநாதா போற்றி 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகை மலை முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 252 ஓலை இட்ட  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தான தத்தன தத்தன தத்தன
     தான தத்தன தத்தன தத்தன
          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

ஓலையிட்ட குழைச்சிகள் சித்திர
     ரூப மொத்த நிறத்திகள் விற்கணை
          யோடு இணைத்த விழிச்சிகள் சர்க்கரை ...... யமுதோடே
ஊறி யொத்த மொழிச்சிகள் புட்குர
     லோடு வைத்து மிழற்று மிடற்றிகள்
          ஓசைபெற்ற துடிக்கொள் இடைச்சிகள் ...... மணம்வீசும்

மாலையிட்ட கழுத்திகள் முத்தணி
     வாரழுத்து தனத்திகள் குத்திர
          மால் விளைத்து மனத்தை யழித்திடு ...... மடமாதர்
மார்பசைத்து மருட்டி இருட்டறை
     வாவெனப் பொருள் பற்றி முயக்கிடு
          மாதருக்கு வருத்தம் இருப்பது ...... தணியாதோ

வேலை வற்றிட நற்கணை தொட்டு அலை
     மீது அடைத்து தனிப்படை விட்டுற
          வீறு அரக்கன் முடித்தலை பத்தையு ...... மலைபோலே
மீதறுத்து நிலத்திலடித்து மெய்
     வேதலக்ஷுமியைச் சிறை விட்டருள்
          வீர அச்சுதனுக்கு நல் அற்புத ...... மருகோனே

நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
     வாரி முத்து நகைக்கொடி சித்திர
          நீல ரத்தின மிக்க அறக்கிளி ...... புதல்வோனே
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில்
     நேச மெத்த அளித்தருள் சற்குரு
          நீல முற்ற திருத்தணி வெற்புறை ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் ...
குண்டலங்களைக் காதணியாக அணிந்தவர்கள், அழகிய உருவம்
வாய்ந்த நிறத்தை உடையவர்கள்,

வில் கணையோடு இணைத்த விழிச்சிகள் சர்க்கரை
அமுதோடே ஊறி ஒத்த மொழிச்சிகள் ... வில் போன்ற

புருவங்களும், அம்பு போன்ற கண்களும் உடையவர்கள், சர்க்கரை
அமுதுடன் ஊறின சுவையைப் போன்ற (இனிய) பேச்சினை
உடையவர்கள்,

புட் குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் ஓசை பெற்ற
துடிக்கொள் இடைச்சிகள் ... பறவைகளின் குரலுடன் மெல்லப்
பேசும் கண்டத்தை உடையவர்கள், ஒலி செய்யும் உடுக்கை
போன்ற இடையை உடையவர்கள்,

மணம் வீசும் மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார்
அழுத்து தனத்திகள் ... வாசனை வீசுகின்ற பூ மாலை அணிந்த
கழுத்தை உடையவர்கள், முத்து மாலை அணிந்த, ரவிக்கையை
அழுத்துகின்ற, மார்பகங்களை உடையவர்கள்,

குத்திர மால் விளைத்து மனத்தை அழித்திடு(ம்) மட மாதர் ...
வஞ்சகம் நிறைந்த காம மயக்கத்தை உண்டாக்கி ஆடவர்கள்
மனதைப் பாழாக்கும் விலைமாதர்கள்.

மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா எனப் பொருள்
பற்றி முயக்கிடு(ம்) மாதருக்கு வருத்தம் இருப்பது
தணியாதோ ... மார்பை அசைத்து மோக மயக்கத்தை உண்டு
பண்ணி, இருண்ட படுக்கை அறைக்கு வரும்படி அழைத்து, கைப்
பொருளை அபகரித்துத் தழுவிடும் விலைமாதரருக்காக நான்
வேதனைப்படுவது தவிராதோ?

வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து
தனிப் படை விட்டுற ... கடல் வற்றிப் போகும்படி சிறந்த
பாணத்தைச் செலுத்தி, கடலின் மேல் அணை இட்டு ஒப்பற்ற
வானரப்படையைச் செலுத்தும்படிச் செய்து,

வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே மீது
அறுத்து நிலத்தில் அடித்து ... கர்வம் கொண்ட இராவணன் முடி
தரித்த பத்துத் தலைகளையும் மலை விழுவது போல மேலே
அறுத்து தரையில் வீழ்த்தி,

மெய் வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள் வீர
அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே ... சத்திய வேத
சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும்
விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே.

நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகைக் கொடி
சித்திர நீல ரத்தின மிக்க அறக் கிளி புதல்வோனே ... கரு நிறம்
கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும்
எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள்,
அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய
பார்வதியின் மகனே,

நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து
அருள் சற்குரு ... திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில்
நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே,

நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே. ...
நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.

நன்றி  -கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0252_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Sunday, June 16, 2019

திருப்புகழ் 251 ஏது புத்தி (திருத்தணிகை)





ஓம் முருகன் துணை 
சிவகுருநாதா போற்றி. சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகைமலை முருகபெருமான் திருவடிப்போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 251 ஏது புத்தி  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தான தத்தன தான தத்தன
     தான தத்தன தான தத்தன
          தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்தி ஐயா எனக்கினி
     யாரை நத்திடுவேன் அவத்தினிலே
          இறத்தல்கொலோ எனக்கு நி ...... தந்தைதாயென்றே
இருக்கவு நானும் இப்படியே
     தவித்திடவோ சகத்தவர்
          எசலிற் படவோ நகைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதேரித்து எனை
     தாளில் வைக்க நியே மறுத்திடில்
          பார் நகைக்கும் ஐயா தகப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில்
     யாரெடுப்பதெனா வெறுத்தழ
          பார் விடுப்பர்களோ எனக்கிது ...... சிந்தியாதோ


ஓத முற்றெழு பால் கொதித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே
ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான் மழுக்கர மாட பொற்கழல்
           ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே

மாதினைப் புன மீதிருக்கு மை
     வாள்விழிக் குறமாதினைத் திரு
          மார்பணைத்த மயூர அற்புத ...... கந்தவேளே
மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார்
       வியப்புற நீடு மெய்த்தவர்
          வாழ் திருத்தணி மாமலைப்பதி ...... தம்பிரானே.


......... சொல் விளக்கம் .........

ஏது புத்தி ஐயா எனக்கு ... எனக்கு புத்தி ஏது ஐயனே?

இனி யாரை நத்திடுவேன் ... இனிமேல் நான் யாரைச் சென்று
விரும்பி நாடுவேன்?

அவத்தினிலே யிறத்தல்கொலோ ... வீணாக இறப்பதுதான் என்
தலைவிதியோ?

எனக்குனி தந்தைதாயென்றே யிருக்கவு ... எனக்கு நீயே தாயும்
தந்தையுமாக இருந்தும்

நானு மிப்படியே தவித்திடவோ ... நான் இந்த விதமாகவே
தவித்திடலாமா?

சகத்தவர் ஏசலிற்படவோ ... உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான்
ஆளாகலாமா?

நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா ... என்னை
இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில்
சேர்த்துக்கொள் ஐயனே*,

தெரித்தெனை தாளில் வைக்க நியே மறுத்திடில் ... என் நிலை
தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில்,

பார்நகைக்குமையா ... உலகோர் நகைப்பார்கள் ஐயனே,

தகப்பன்முன் மைந்தனோடி ... தந்தையின் முன் குழந்தை
ஓடிச்சென்று,

பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில் ... பால் மணம் மாறாத வாயால்
குரலெழுப்பி அழுதால்,

யாரெடுப்பதெனா வெறுத்தழ ... இந்தக் குழந்தையை யார்
எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக

பார் விடுப்பர்களோ ... இப்பூமியிலே விட்டு விடுவார்களோ?

எனக்கிது சிந்தியாதோ ... எனக்கு இந்த உண்மை சிந்தையிலே
தோன்றலாகாதோ?

ஓத முற்றெழு பால்கொதித்தது போல ... வெள்ளமாய்ப் பெருகி
எழும் பாற்கடல் பொங்கியது போல

எட்டிகை நீசமுட்டரை ... எட்டுத் திசைகளிலும் உள்ள இழிந்த
மூடர்களான அசுரர்களை

ஓட வெட்டிய பாநு சத்திகை யெங்கள்கோவே ... ஓடும்படி
வெட்டியழித்த சூரிய ஒளி கொண்ட சக்திவேலைக் கரத்திலே
கொண்ட எங்கள் அரசனே,

ஓத மொய்ச்சடையாட ... கங்கை வெள்ளம் பெருகும் அடர்ந்த
சடாமுடி ஆடவும்,

உற்றமர் மான்மழுக்கர மாட ... பொருந்தி அமர்ந்த மானும், மழுவும்
ஏந்திய கரங்கள் ஆடவும்,

பொற்கழலோசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே ...
அழகிய கால்களில் கழல் ஒலிசெய்யவும், நடனம் புரிந்த சிவனார்
தந்தளித்த செல்வமே,

மாதினைப்புன மீதிருக்கு ... பெரிய தினைப்புனத்தின் மீது
இருந்தவளும்,

மைவாள்விழிக் குறமாதினை ... மை பூசிய, ஒளி மிகுந்த கண்களை
உடையவளுமான குறப்பெண் வள்ளியை,

திருமார்பணைத்த மயூர அற்புத கந்தவேளே ... உன் அழகிய
மார்புறத் தழுவிய மயில்வாகனனே, அற்புத மூர்த்தியாம்
கந்த வேளே,

மாரன் வெற்றிகொள் பூமுடிக்குழலார் வியப்புற ... மன்மதன்
வெற்றி பெறும்படியான அழகிய பூமுடித்த கூந்தலை உடைய
மாதர்கள் ஆச்சரியப்படும்படியான

நீடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. ...
பெரிய மெய்த்தவசிகள் வாழும் திருத்தணிகை என்ற சிறந்த
மலைத்தலத்தில் வாழும் தம்பிரானே.


* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை
அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.

நன்றி கௌமாரம்.காம்.  http://www.kaumaram.com/thiru/nnt0251_u.html

பாடல் பாடியவர். தர்மபுரம் சாமிநாதன். https://www.youtube.com/watch?v=vkF_lqQ2gHo

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா 
முருகா சரணம் 

Tuesday, June 11, 2019

திருப்புகழ் 250 எனை அடைந்த (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை 
சிவகுருநாதா போற்றி 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகை மலை முருகா பெருமானுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 250 எனை அடைந்த  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான

......... பாடல் .........

எனையடைந்த குட்டம் வினை மிகுந்த பித்தம்
     எரிவழங்கு வெப்பு ...... வலிபேசா
இகலி நின்றலைக்கு முயலகன் குலைப்பொடு
     இருமல் என்று உரைக்கும் ...... இவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த
     மதி மயங்கி விட்டு ...... மடியாதே
மருவி இன்றெனக்கு மரக தஞ்சிறக்கு
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

நினை வணங்கு பத்தர் அனைவருந் தழைக்க
     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா
நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்ர
     நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே

தினைவிளங்கல் உற்ற புன இளங்குறத்தி
     செயல் அறிந்து அணைக்கு ...... மணிமார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்றடைத்த
     சிறை திறந்து விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் ... எனக்கு வந்த
குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய்,

எரிவழங்கு வெப்பு ... கொதிப்பைத் தருகிற காய்ச்சல்,

வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் ... சொல்ல முடியாத
வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற
வலிப்புநோய்,

குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே ...
நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த
நோய்களுடனே தவித்து,

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து ... வீடுகள், பெண்டிர்,
மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி,

சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே ... நல்லறிவு மயங்கிப்போய்
அடியேன் இறக்காதவண்ணம்,

மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் ... நீ இன்று
என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில்

வந்து முத்தி தரவேணும் ... வந்து எனக்கு பேரின்ப முக்தியை
அருள்வாயாக.

நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க ... உன்னைத் தொழும்
அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி

நெறியில் நின்ற வெற்றி முனைவேலா ... அதற்கான வழியில்
அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன்
நிற்கும் வேலனே,

நிலைபெ றுந்திருத்த ணியில்விளங்கு ... அழியாத திருத்தணிகைப்
பதியில் விளங்குகின்ற

சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே ... அழகிய நெடிய
குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே,

தினைவிளங்கலுற்ற புனஇளங்குறத்தி ... தினைப்பயிர் செழிப்பாக
வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை,

செயலறிந்து அணைக்கு மணிமார்பா ... அவளுடைய
அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே,

திசைமுகன்திகைக்க அசுரர் அன்றடைத்த ... பிரமதேவன்
திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த

சிறைதிறந்து விட்ட பெருமாளே. ... சிறைகளைத் திறந்து விட்டு
தேவர்களை விடுவித்த பெருமாளே.


நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0250_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

Thursday, June 6, 2019

திருப்புகழ் 245 உடையவர்கள் ஏவர் (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகைமலை முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 245 உடையவர்கள் ஏவர்  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான


......... பாடல் .........

உடையவர்கள் எவரெவர்கள் எனநாடி
     யுளமகிழ ஆசு ...... கவிபாடி
உமதுபுகழ் மேருகிரி யளவுமானது
     என உரமுமான ...... மொழிபேசி

நடைபழகி மீள வறியவர்கள் நாளை
     நடவுமென வாடி ...... முகம்வேறாய்
நலியுமுனமே உன் அருணவொளி வீசு
     நளின இருபாதம் ...... அருள்வாயே

விடைகொளுவு பாகர் விமலர் திரிசூலர்
     விகிர்தர் பரயோகர் ...... நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு
     விடவரவு சூடும் ...... அதிபாரச்

சடையிறைவர் காண உமைமகிழ ஞான
     தளர் நடையிடா முன் ...... வருவோனே
தவமலரு நீல மலர்சுனை அநாதி
     தணிமலை உலாவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உடையவர்கள் ஏவர் எவர்களென நாடி ... செல்வம் படைத்தவர்கள்
எவர்கள் எவர்கள் என்று தேடி,

உளமகிழ ஆசுகவிபாடி ... அவர்கள் மனம் மகிழ அவர்கள் மீது
ஆசுகவிகளைப்* பாடி,

உமதுபுகழ் மேரு கிரியளவும் ஆனது என ... உம் புகழ் மேருமலை
அளவு உயர்ந்தது எனக் கூறியும்,

உரமுமான மொழிபேசி ... வலிமையான முகஸ்துதி மொழிகளைப்
பேசியும்,

நடைபழகி மீள வறியவர்கள் ... நடந்து நடந்து பலநாள் போய்ப்
பழகியும், தரித்திரர்களாகவே மீளும்படி,

நாளை நடவுமென வாடி முகம்வேறாய் ... நாளைக்கு வா என்றே
கூற, அதனால் அகம் வாடி முகம் களை மாற,

நலியுமுனமே உன் அருணவொளி வீசு ... வருந்தும்
முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற

நளினஇரு பாதம் அருள்வாயே ... தாமரை போன்ற இரு
பாதங்களையும் தந்தருள்வாயாக.

விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் ... ரிஷபத்தை
வாகனமாகச் செலுத்துபவரும், பரிசுத்தரும், திரிசூலத்தை ஏந்தியவரும்,

விகிர்தர் பர யோகர் ... மிக்க உயர்ந்தவரும், மேலான யோகத்தவரும்,

நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு ...
பிறைச்சந்திரன், விளாமர (வில்வ)த் தளிர், சிறிய பூளைப் பூ, பற்களுடன்
கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு,

விட அரவு சூடும் அதிபாரச் சடையிறைவர் காண ... விஷப்பாம்பு
ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய
சிவபெருமான் கண்டு களிக்கவும்,

உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன்வருவோனே ...
உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே
வருபவனே,

தவமலரு நீல மலர் சுனை ... மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள்
உள்ள சுனையுடையதும்,

அநாதி தணிமலையு லாவு பெருமாளே. ... ஆதியில்லாததுமான
மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே.



*
தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0245_u.html

வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்